27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் அவர்களுக்குரிய தெய்வங்கள்

அசுவினி: அசுவினி நட்சத்திரத்தில் அஸ்வத்தாமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி.

பரணி: பரணி நட்சத்திரத்தில் துரியோதனன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி. 

கிருத்திகை: கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகேயன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் முருகப் பெருமான்.

ரோகிணி: ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகிருஷ்ணன். 

மிருகசீரிடம்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் புருஷமிருகம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.

திருவாதிரை: திருவாதிரை நட்சத்திரத்தில் கருடன், ருத்ரன், ஆதிசங்கரர்ரா மற்றும் மானுஜர் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான். 

புனர்பூசம்: புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீராமர்.

பூசம்: பூசம் நட்சத்திரத்தில் பரதன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

ஆயில்யம்: ஆயில்யம் நட்சத்திரத்தில் தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆதிசேசன் . 

மகம்: மகம் நட்சத்திரத்தில் சீதை, அர்ச்சுணன் மற்றும் யமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசூரிய பகவான். 

பூரம்: பூரம் நட்சத்திரத்தில் பார்வதி,மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆண்டாள் தேவி.

உத்திரம்: உத்திரம் நட்சத்திரத்தில் மஹாலக்ஷ்மி மற்றும் குரு பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமகாலட்சுமி தேவி.

அஸ்தம்: அஸ்தம் நட்சத்திரத்தில் நகுலன்-சகாதேவன், மற்றும் லவ-குசன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகாயத்ரி தேவி.

சித்திரை: சித்திரை நட்சத்திரத்தில் வில்வ மரம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசக்கரத்தாழ்வார்.

சுவாதி: சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீநரசிம்மமூர்த்தி.

விசாகம்: விசாகம் நட்சத்திரத்தில் கணேசர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமுருகப் பெருமான்.

அனுசம்: அனுசம் நட்சத்திரத்தில் நந்தனம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீலட்சுமி நாரயணர். 

கேட்டை: கேட்டை நட்சத்திரத்தில் தர்மன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹ பெருமாள். 

மூலம்: மூலம் நட்சத்திரத்தில் அனுமன் மற்றும் ராவணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆஞ்சநேயர்.

பூராடம்: பூராடம் நட்சத்திரத்தில் பிரகஸ்பதி பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஜம்புகேஸ்வரர்.

உத்திராடம்: உத்திராடம் நட்சத்திரத்தில் சல்யன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீவிநாயகப் பெருமான். 

திருவோணம்: திருவோணம் நட்சத்திரத்தில் வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஹயக்கிரீவர். 

அவிட்டம்: அவிட்டம் நட்சத்திரத்தில் துந்துபி வாத்தியம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள்.

சதயம்: சதயம் நட்சத்திரத்தில் வருணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் . 

பூரட்டாதி: பூரட்டாதி நட்சத்திரத்தில் கர்ணன், மற்றும் குபேரன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஏகபாதர்.

உத்திரட்டாதி: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜடாயு மற்றும் காமதேனு பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமகாஈஸ்வரர். 

ரேவதி: ரேவதி நட்சத்திரத்தில் அபிமன்யு மற்றும் சனிபகவான் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅரங்கநாதன்.

No comments:

Post a Comment